1204164

ஜெபத்தோட்ட ஊழியமானது, ஆவியானவருடைய தெளிவான வழிநடத்துதலின்படி, தந்தையவர்களால் 1990ம் ஆண்டு, தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டம், பெரியநரிக்கோட்டை என்ற கிராமத்தின் அருகில், ஆண்டவரின் கிருபையால், கிராம மக்களின் ஒத்துழைப்பு மற்றும் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது. தொடக்கத்தில், ஓரு சிறிய கொட்டகையுடன் ஆரம்பிக்கப்பட்டது. அந்த நாட்களில், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை, இரவு ஜெபமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டங்களில் பங்கு பெற்று தேவ ஆசீர்வாதம் பெற்று சென்றனர். பரிசுத்த ஆவியானவர் திரளான அற்புதங்கள் மற்றும் அளவுகடந்த ஆராதனை அபிஷேகம் மூலம் மகிமையடைந்தார். கூட்டங்கள் யாவும் திறந்தவெளியிலேயே நடைபெற்றன. பின்பு புதன்கிழமை நடைபெற்ற ஜெபம், சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டது.

ஆவியானவர் தொடர்ந்து மகிமையான காரியங்களை செய்து வந்தார். தற்பொழுது ஓவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமைகளில், திறப்பிலே நிற்கும் சேனை உபவாச ஜெபம், காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடந்து வருகிறது. இந்த கூட்டங்களில், சுற்று வட்டாரத்திலிருந்தும் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலுமிருந்தும் திரளான மக்கள் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதம் பெற்று செல்கின்றனர். ஓவ்வொரு மாதமும், இந்த கூட்டங்களில் தந்தையவர்கள் கலந்து கொண்டு, தேவசெய்தியை வழங்கி மக்களை ஆசீர்வதித்து வருகிறார்கள். இந்த நாளில், ஞானஸ்நானத்திற்கு ஒப்புக்கொடுத்து வருபவர்களுக்கு தேவ ஆலோசனை வழங்கி, தந்தையவர்கள் ஞானஸ்நானம் கொடுத்து வருகிறார்கள். தற்போது துதிமண்டபம் என்ற பெயரில், சுமார் 3000 பேர் அமர்ந்து கர்த்தரை தொழுது கொள்ளும் வகையில் ஜெப ஆலயம் கட்டப்பட்டு, உபவாச ஜெபம் அங்கு நடைபெற்று வருகிறது

Fr S J Berchmans

1990ம் ஆண்டு, தந்தையவர்கள் ஜெபத்தோட்ட ஊழியத்தை ஆரம்பித்தபோது, அநேகர் தங்களை அவரது ஜெப ஐக்கியத்தில் இணைத்துக் கொண்டு, அந்தந்த பகுதிகளில் ஜெப குழுக்களாக செயல்படத் தொடங்கி, இன்று இயேசு நம்மோடு, ஜெபத்தோட்ட ஐக்கியம் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான சபைகளாக தமிழகம் முழுவதும் இயங்கி வருகின்றன. தேவனுக்கே மகிமை.

Fr S J Berchmans

ஜெபத்தோட்ட ஊழியங்கள் இரண்டு முக்கிய அலுவலகங்களுடன் செயல்பட்டு வருகிறது. ஸ்தல அலுவலகம், காளையார்கோவில், ஜெபத்தோட்ட வளாகத்திலேயே செயல்பட்டு வருகிறது. இதன் நிர்வாகியாக சகோதரர். ஜோசப் அவர்கள் உள்ளார்கள். மேலும் அலுவலக ஊழியர்களாக மூன்று சகோதரிகளுடன் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. சென்னை அலுவலகம், சகோதரி. லூசில்லா அவர்களின் மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது.

மேலும் ஜெபத்தோட்ட ஸ்தல சபையில், ஒவ்வொரு வாரமும், ஞாயிற்றுக் கிழமைகளில், காலை 8 மணி முதல் 10:30 வரை ஞாயிறு ஆராதனை நடைபெறுகிறது. ஒவ்வொரு வாரமும், செவ்வாய்க்கிழமைகளில், சபை உபவாச ஜெபம் காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடைபெறுகிறது. மேலும் தினமும் காலை 5:30 முதல் 6:30 வரை, முற்பகல் 10:30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, மாலை 7 மணி முதல் 8:30 மணி வரை, ஜெபத்தோட்ட வளாகத்தில் ஜெபம் நடைபெற்று வருகிறது.

இத்துடன், ஜெபத்தோட்ட வளாகத்தில், மகிழ்ச்சி இல்லம் என்ற பெயரில் ஆதரவற்ற சிறுமியர் காப்பகம் இயங்கி வருகிறது. மகிழ்ச்சி இல்லம் குறித்த தகவல்களுக்கு, மகிழ்ச்சி இல்ல பக்கத்தை பார்க்கவும்.

தந்தையவர்களுக்காகவும், ஊழியங்களுக்காகவும்  தொடர்ந்து ஜெபித்துக் கொள்ளுங்கள். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

தமிழ்